April 19, 2024
  • April 19, 2024
Breaking News
  • Home
  • திரைப்படம்
  • விஷாலும் அர்ஜுனும் ஹாட்டஸ்ட் ஹீரோக்கள்- சமந்தா அக்கினேனி
May 6, 2018

விஷாலும் அர்ஜுனும் ஹாட்டஸ்ட் ஹீரோக்கள்- சமந்தா அக்கினேனி

By 0 1032 Views

‘இரும்புத்திரை’ மே மாதம் 11 தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. படத்தில் விஷாலுடன் ஜோடி போடும் நாயகி சமந்தா அக்கினேனி, படம் பற்றி பிரைவேட்டாகப் பகிர்ந்து கொண்ட விஷயங்கள்…

“நமக்கு இன்று ட்விட்டர் , பேஸ்புக் , இன்ஸ்ட்டாகிராம் போன்ற சமூகவலை தளங்கள் அனைத்தும் முக்கித்துவம் வாய்ந்ததாகி விட்டது. அவற்றை நாம் சரியாக பயன்படுத்த வேண்டும். அவற்றுக்கு நாம் அடிமை ஆவதுதான் தவறு. இதை எடுத்துக் கூறி நம்மிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் படமாக இரும்புத்திரை இருக்கும்.

இந்தப் படத்தின் கதையை கேட்கும் போது நாம் வாழும் இந்த சமூகத்தில் நமக்குத் தெரியாமல் இவ்வளவு பிரச்சனைகள் இன்டர்நெட் மூலமாக நம்மைச் சுற்றி நடக்கிறதா என்று பதைபதைக்க வைத்தது. படத்தின் கதையைக் கேட்டு முடித்ததும் எனக்கு என்னுடைய கைபேசியை தொடவே பயமாக இருந்தது.

இந்தப் படத்தில் வருவது போன்ற சம்பவங்கள் எதுவும் என் வாழ்க்கையில் நடக்கவில்லை. அதற்கு கடவுளுக்குதான் நன்றி சொல்ல வேண்டும். ஆனால் என்னுடைய நட்பு வட்டத்தில் உள்ள சிலர் ‘உங்களுக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது… 1 கோடி ரூபாய் வென்றுள்ளீர்கள்…’ என்று வரும் விளம்பரங்களுக்கு பதிலளித்து, பல லட்சங்கள் கொடுத்து ஏமாந்து உள்ளார்கள்.

இந்தப்பட நாயகன் விஷால் மற்றும் வில்லன் அர்ஜுன் சார் இருவருமே அவரவர் ஸ்டைலில் ஹாட்டஸ்ட் ஹீரோக்கள் தான். அவர்களோடு இப்படத்தில் நடித்தது மகிழ்ச்சி.

எனக்கு புதுமுக இயக்குநர்களோடு இணைந்து பணியாற்றுவதில் சிறிது தயக்கம் இருந்தாலும் இயக்குனர் மித்ரன் ஒரு போதும் என்னை அப்படி கவலைப்பட வைத்தது இல்லை. அவர் கதை சொன்னது போலவே படத்தையும் சிறப்பாக இயக்கியுள்ளார்..!”